Veda Gyanam

We're open for new collaborations.
News to be updated weekly.

Verse 1

அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம்.

Explanation/meanings

அங்கும் இங்கும் = all pervading; எனாதபடி = இங்கு தாயுமானவர் அந்த பராபிரம்மனை குறிக்கிறரர். நாம் இங்கு இருப்பு என்று அறிகிறோம். இருப்பிற்கு எல்லை கிடையாது.

 எங்கும் ப்ரகாஷமாய் =illuminating everythimg;

ஆனந்த பூர்த்தியாகி = limitless happiness /sat chit anandaH;

அருளோடு நிறைந்தது எது = full of his grace;

தன் அருள் வெளிக்குளே =  through atma I know I am there.  Atma is that power with which I see and experience the universe;

அகிலாண்ட கோடி எல்லாம் all the objects in the universe; தங்கும் படி existence; இச்சய் வைத்து = iccha Shakti;

உயிருக்கு உயிராய் தழைத்தது எது = for all existence, he is the life source in all beings;

மனவாக்கினில் = in thoughts and speech;

தட்டாமல் நின்றது எது thoughts cannot reach or speech cannot describe;

சமய கோடிகள் எல்லாம் தன் தெய்வம் எந்தெய்வம் என்றும் தொடர்ந்து= bhagvan accompanies us everywhere since time immemorial;

எதிர் வழுக்கு இடவும் நின்றது எது goes everywhere without obstruction;

எங்கணும் பெருவழக்காய் big discussion through centuries everywhere on bhagvan; யாதினும் வல்ல not lacking in anything;

ஒரு சித்தாகி இன்பமாய் one power of love;

என்றைக்கும் உள்ளது எது nityam;

கங்குல பகல் அற நின்ற no night/afternoon and is beyond time;

எல்லை உள்ளது எது no restriction in space;

அது கருத்திற்க்கு இசைந்தது எது principle truth;

கண்டன எல்லாம் மௌன உரு வெளிய ஆகவும் = in silence; கருதி அஞ்சலி செய்குவோம் saluting that

Powered by WordPress.com.

%d