பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.
பச்சை மா மலை போல் மேனி – பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்
பவளம் வாய் – பவளம் போன்ற சிவந்த திருவாயையும்
செம் கமலம் கண் – செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுமுடைய
அச்சுதா – அச்சுதனே! அச்சுதன் என்றால் தூயமானவன்
அமரர்ஏறே – அமரன் என்றால் அழிவு இல்லாதவன்
ஆயர்தம் கொழுந்தே – ஆயர் குலத்தில் பிறந்த கொழுந்தே அல்லது இடையர் குலத்தில் பிறந்த இளம் குமாரனே
என்னும் – என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற
இச்சுவை – இந்த அநுபவ ருசியை
தவிர – விட்டுவிடும்படி
யான்போய் – யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று
இந்திர லோகம் ஆளும்- இந்திர லோகம் எனக்கு கிடைத்தாலும்
அச்சுவை – அந்த அநுபவருசியை(இந்திர லோகத்தில் கிடைக்கும்)
பெறினும் – அடைவதாயிருந்தாலும்
வேண்டேன் – (அதனை) விரும்பமாட்டேன்
Here the poet Thondaradi Podi Alwar describes the lord as Achuta and Amarar , an attribute of brahman that is pure and always immortal. He describes the colour of the lord as Green which symbolizes fertility and growth (a peson’s mind, body has to be fertile and should be able to mature to know who is the lord). The poet says that if you give me indra loka or take me there, i am not interested as I would lose the benefit of singing your praise and knowing you. What’s the point of going to indra loka when I can be with you just by uttering your name and praise. The words expressed by the poet seem very touching and one can see the inseparable bhakti between him and the lord. He says Paramatma here and his lotus shaped lips denote the water lily which is beautiful to look. The water in a lotus leaf drops on to it but doesn’t stay and is untainted by the water nor gets wet. The poet is far advanced in bhakti and probably one of the best rendered composition I have heard.
Leave a Reply with your comments on the topic of interest to you.