ஊர் அனந்தம், பெற்ற பேர் அனந்தம் , சுற்றும் உறவு அனந்தம்
வினையினால் உடல் அனந்தம் , செயும் வினை அனந்தம்
கருத்தோ அனந்தம் , பெற்ற பேர் சீர் அனந்தம் , சொர்க்க நரகமும் அனந்தம்
நல் தெய்வமும் ஆனந்தம் , பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம்
அதனால் ஞான சக்தியால் உணர்ந்து , கார் அனந்தம்
தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே
கருதரிய ஆனந்த மழை பொழியும் முகிலை , நம் கடவுளை
துரிய வடிவை , பேர் அனந்தம் , மறை அனந்தம்
சொலும் பெரிய மௌனத்தின் வைப்பை , பேசரும்
அனந்த பத ஞான அனந்தம்
ஆம் ! பெரிய பொருளை பணிகுவோம்
பொழிப்புரை
- அனந்தம் – என்றால் பல
- ஊர் – (உயிர்கள் பல பிறவிக்குள் சென்று வந்துள்ளாமையால் ) பிறந்த ஊர்கள்
- பெற்ற பேர் அனந்தம் – பெற்ற பெயர்கள் பல
- சுற்றும் உறவு அனந்தம் – சூழ இருந்த உறவுகள் பல
- வினையினால் உடல் அனந்தம் – நல்வினை தீவினை செய்வதால் பெற்ற உடல்கள் பல
- செய்யும் வினை அனந்தம் -செய்யும் செயல்கள் பல
- கருத்தோ அனந்தம் – கருத்துகள் பல
- பெற்ற பேர் சீர் அனந்தம் – பெற்ற பெயரும் புகழும் பல
- நல் தெய்வமும் அனந்தம் – தெய்வங்கள் பல
- பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் – சமயம் என்கிற பல பேதத்தை உருவாக்கி
- அதனால் ஞான சிற் சக்தியால் உணர்ந்து – ஞானத்தை தரும் உயிருக்கு ஒளியாய் விளங்கும் சக்தி
- கார் அனந்தம் – மேகம் பல
- கோடி வருஷித்தது என – மெகா கூட்டம் பெரும் அளவில் திரண்டு வந்து
- கண்ணும் விண்ணும் தேக்கவே – அன்பரது கண்ணிலும் , மனமாகிய ஆகாயத்திலும் நிறைந்து நின்று
- கருதரிய ஆனந்த மழை பொழியும் முகிலை – எண்ணுதற்கு அறியாத இன்ப மழையை பொழியும் மேகத்தை போல்
- நம் கடவுளை – நமது கடவுளை
- துரிய வடி வைப்பை பேர் அனந்தம் – துரியம் என்கிற நிலையில் மற்ற மூன்று நிலையை அறிந்து
- பேசி மறை அனந்தம் – பல வேதங்களால் சொல்லப்படுவதும் , அதே சமயத்தில் பேச்சிற்கு எட்டாத ஒன்றையும்
- மௌனத்தினை வைப்பை – மௌனமாகிய குணம் ஒன்றை கொண்டு
- பேசரும் – வார்த்தைக்கு எட்டாத ஒன்றை
- அனந்த பத ஞான அனந்தம் – எல்லையற்ற உயர்ந்த நிலையிலான ஞானமாகிய பேரின்பம்
- ஆம் !! பெரிய பொருளை பணிகுவோம் – அத்தகைய இறைவனை வணங்குவோம்
English Summary
Here Thayumanar describes the beauty of the lord in the second verse. Here he says the following
There are several places where we have taken birth
Several names we have got due to countless birth
Several relationships we have had due to countless birth
Several bodies we might have had and which is sometimes good and bad i.e. we feel happy or sad due to our dehatma buddhi
Several karma , good and bad we would have done with the body we acquired
We would have gone to svarga loka or naraka depending upon the deeds performed several times
Several gods or devatas we would have worshipped
Split between the division of time and space. i.e. we would have experienced division of time and space during several births
By virtue of the gyanam that the lord has given us
Now we know the lord who is of unparalleled happiness just like the cloud which brings rain. Rain always bring happiness and prosperity to the land and people
That lord who has several names yet one
That lord who is spoken about in the vedas
That lord who cannot be reached by words nor described
That lord who is of unlimited happiness
That lord who is silent yet through silence teaches brahma tattvam (dakshinamurthy)
To such a lord, let’s offer our prayers.
Leave a Reply with your comments on the topic of interest to you.