இறைவன் யார் என்பதை தாயுமானவர் மிக அழகாக இங்கு கூறி உள்ளார்
ஐவகை எனும்பூதம் ஆதியை வகுத்து
அதனுள் அசரசர பேதம் ஆன
யாவையும் வகுத்து, நல் அறிவையும் வகுத்து
மறை ஆதி நூலையும் வகுத்து
சைவம் முதல் ஆம் அளவில் சமயமும் வகுத்து
மேல்சமயம் கடந்த மோன
சமரசமும் வகுத்தவன்
- ஐவகை – ஐந்து விதம் (five types)
- பூதம் – உலகத்தில் காணும் ஐந்து விதமான பொருள் (ஆகாயம், நீர் , நெருப்பு , பூமி, காற்று)- (five elements)
- ஆதியை வகுத்து – இவ்வாறு ஐந்து பொருள்களையும் உருவாக்கி (created these objects)
- அதனுள் – அதில் (in that)
- அசர – மாறாதவை (that which does not change or nityam)
- சர – மாருகின்றவை (that which changes or anityam)
- பேதம் – வித்தியாசம் (differences)
- ஆன யாவையும் வகுத்து – இவைகளை உருவாக்கி (having created these)
- நல் அறிவையும் வகுத்து – நமக்கு நல்ல அறிவையும் கொடுத்து (given us good intellect or viveka and free will)
- மறை ஆதி நூலையும் வகுத்து – சாஸ்திரம் என்கிற நூலையும் நமக்கு கொடுத்து (he has given us veda or shastram)
- சைவம் முதல் ஆம் அளவில் – அந்த சிவ குரு முதலில் தோன்றிய (that which has been there from the beginning)
- சமயமும் வகுத்து – நேரமும் உருவாக்கி (having created time as a division)
- மேல் சமயமும் கடந்த – நேரம் அல்லது சமயத்திற்கு எட்டாத (but he himself transcends time)
- மோன சமரசமும் வகுத்தவன் – மௌன ரூபமாகவே இருக்கிற அந்த (the silent lord or dakshinamurthy who by his silence teaches the brahma tattvam)
கடவுளே இறைவன் என்று தாயுமானவர் இங்கு கூறியுள்ளார் (such a lord or ishwara is described here by Thayumanavar)
Leave a Reply with your comments on the topic of interest to you.