Veda Gyanam

We're open for new collaborations.
News to be updated weekly.

Introduction-ஸ்ரீ ருத்ரம் – ஒரு அறிமுகம்

பிரார்த்தனை

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க, இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க, ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க , வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க, புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க, சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி, தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி, மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி, சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி

வித்யாஸ்ருதி உத்க்ருஷ்ட ருத்ரைகாதசீனி ஸ்ருதௌ

தத்ர பஞ்சாக்ஷ்ரி தஸ்யாம் சிவ இத்யக்ஷரத்வயம்  (இதி அக்ஷர த்வயம் – அதாவது சி , வா என்ற இரண்டு எழுத்துக்கள் )

எல்லாவிதமான சாஸ்திரங்களில் மிக உத்தமனான ஸ்ரீ ருத்ரம் என்கிற மந்திரம் .இது ஒரு மந்திர வழிபாடு .

ஸ்ரீ ருத்ரத்தின் நடுவில் இருக்கிற பஞ்சாக்ஷ்ரி மந்திரம் மிகவும் உத்தமம் .

ந ம சி வா ய – என்று ஐந்து எழுத்துக்கள் கொண்ட இதன் அர்த்தம் என்றால் என்ன?

  1. ந என்றால் இந்த பூமி
  2. ம என்றால் தண்ணீர் 
  3. சி என்றால் நெருப்பு 
  4. வா  என்றால் பிராணன் 
  5. ய என்றால் ஆகாயம் 

எங்கும் வியாபித்து இருக்கும் பரம்பொருளே இந்த சிவன் என்கிற தத்துவம். சர்வம் வ்யாபினம் ஈசானம் ருத்ரம் வை விஸ்வ ரூபிணம் 

ஸ்ரீ ருத்ரம் பெயர் காரணம் 

ரூத் தூக்கம் துக்கஹேதுர் வா தத் த்ராவயதி ந பிரபு 

ருத்ர இதியுச்யதே தஸ்மாத் சிவ பரமகாரணம் 

  1. ரூத் – தூக்கம் (துன்பத்திற்கு காரணமான நோய் – மரணம், பஞ்சம் )
  2. த்ர – என்றால் துக்கத்தை ஓட்டுபவர் 
  3. துக்கஹேதுர் – துக்கத்திற்கு  காரணமாக இருக்கின்ற 
  4. வா – அல்லது 
  5. தத் த்ராவயதி – த்ரயாதே என்றால் கடந்து செல்பவன் , துக்கத்தை நீக்குகிறவன் )
  6. ந பிரபு – அந்த பகவானை 
  7. தஸ்மாத் – அதாவது 
  8. சிவ -அந்த சிவனை 
  9. பரம காரணம் – ஒன்றே காரணம் 

இந்த ருத்ரத்தை சத ருத்ரீ என்றும் கூறப்படுகிறது . சதம் என்றால் நூறு . அதாவது சிவனை நூற்றுக்கணக்கான வடிவில், போற்றி இருப்பதால் ஸ்ரீ ருத்ரம் என்று போற்றப்படுகிறது. மோக்ஷத்தை அடையும் சாதனமாக ருத்ரம் ஞானத்தை அருள்வதால் இதை ருத்ரோஉபநிஷத் என்றும் போற்றப்படுகிறது .

ருத்ரத்தை ஜபித்தால் என்ன பயன்?

  • 1. சித்த சுத்தி 
  • 2. அந்த கரண சுத்தி 
  • 3, மன அமைதி 
  • 4. ஆன்மிக வாழ்வை வகுத்தறியும் வழி 

கைவல்ய உபநிஷத்தில் கடைசி இரண்டு வரிகள் ருத்ர மஹிமை பற்றிய விவரங்களை கூறுகிறது 

यः शतरुद्रियमधिते सोआग्निपुतो भवति – அக்னியால் தூய்மை 

  • सुरापानात् पूतो भवति -மது அருந்தினவர்களும் பாபத்தில் இருந்து புனிதம் ஆகி விடுகிறார்கள் 
  • ब्रम्हाहत्यात् पूतो भवति – எவன் ஒருவன் ப்ரஹ்ம ஹத்யா (அதாவது ஒரு பிராம்மணனை ஹிம்சை செய்கிறானோ – காயிகம் வாசிகம் மனசம் ) அவனுக்கும் முக்தி கிடைப்பது சகஜம் 
  • क्र्त्याक्र्त्यपुतो भवति – செய்ய வேண்டியதை செய்யாமலும்  , செய்யக்கூடாத காரியமும் செய்பவர்கள் 
  • இந்த நான்கு விதமான பாபங்களும், இவர்களுக்கு துணையாக இருப்பவனும் பாபகார்யம் செய்பவன் 

Powered by WordPress.com.

%d bloggers like this: