போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே
1. இங்கு அமரர் என்பது இன்ப வேட்கையை தேடி செல்பவர். பகவத் கீதையில் இவர்களை அர்த்தர்கள் என்று கூறப்படிகிறது. இவர்கள் பகவனை (புனிதன்) போற்றி இன்பத்தை தேடுபவர்.
2. அசுரர் என்பவர் பொருள், சக்தி, என்று அலைபவர். இவர்களை இங்கு அசுரர்கள் என்று கூறுகிறார் திரூமுலர். இவர்கள் தன் கைகளால் மலர் தூவி இறைவனை வழிபடுகிறார்கள். இவர்களை கீதையில் அர்த்தார்த்தி என்று கூறி இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்னர்.
3. மனிதர் என்பவர் இங்கு அறத்தை தேடி (தர்மத்தை) கடைபிடிப்பவர். இவர்களை இங்கு கர்மயோகி என்று நாம் எடுத்து கொள்ளலாம். இவர்களை கீதையில் முமுக்ஷு என்று நாம் அறிவோம். முமுக்ஷு என்பவர் இறைவன் யார் என்று அறிய முற்படுவர்.
4. ஆனால் வீடுபேற்று (மோக்ஷம்) என்பவர் இறைவன் இரு பொருள் அல்ல என்று நன்கு அறிந்து செயல் படுபவர். இவர்களை ஞானி என்று கீதையில் நாம் படித்து இருக்கிறோம்
இவ்வாறு திருமூலர் திருமந்திரத்தில் நான்கு வகையான பக்தர்களை பற்றி கூறியிருக்கிறார். கீதையிலும் நாம் இதை காணலாம். திருக்குறளில் இதை அறம் , [பொருள் , இன்பம் , வீடு என்று கூறிகிறார் வள்ளுவர் பெருமான். வீடு என்பது மோக்ஷத்தை உணர்த்துவது.
1. அறம் என்றால் தர்மம்
2. பொருள் என்பது பணம், மனை, பந்தம், பாசம், மனைவி, மக்கள் மற்றும் மேல் சுகத்தை கொடுக்க இல்லாதது.
3. இன்பம் என்பது கடவுள் வழிபாடு, கடவுள் யார் என்று அறிய வேண்டிய ஆர்வம், தர்மத்தை கடைபிடித்து அறவழியில் செல்லுவது.
4. வீடு என்பது ஞானம் என்று அறிந்து கொள்ளலாம்.
அத்தியாயம் 7- ச்லோகம் 16
சதுர் விதாம் பஜந்தே மாம் ஜனாஹ சுக்ரிதினோ அர்ஜுனா
ஆர்த்தோ ஜிக்நாசு அர்த்தார்த்தி ஞாநி ச பரதஅர்ஷபா
திருமந்திரம் சைவ சித்தாந்தம் இருந்தாலும் இங்கு கருத்து வேறுபாடு இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஓம் ஸ்ரீ நமசிவாய.வாழ்க நாதன் தாழ் வாழ்க
இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க