மறம்சுவர் மதிளெடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போதறிய மாட்டீர்
அறம்சுவராகி நின்ற அரங்கனார்க் காட்செய்யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.
- மறம் சுவர் – கொடுமையாகிற சுவரை
- மதிள் எடுத்து – மதிளாக எழுப்பியும்
- மறுமைக்கு – ஆமுஷ்மிக பலத்திற்கு
- வெறுமை பூண்டு – ஏழ்மையை மேற்கொண்டும் இருக்கிற நீங்கள்
- புறம் சுவர் – வெளிச்சுவராய்
- ஓட்டை – அநித்யமான
- மாடம் – சரீரமானது
- புரளும்போது – தரையில் விழும் காலத்தை
- அறியமாட்டீர் – அறியமாட்டீர்
- அறம் சுவர் ஆகிநின்ற – தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற
- அரங்கனார்க்கு – அழகியமணவாளனுக்கு
- ஆள்செய்யாதே -அடிமை செய்யாமல்
- புறம் சுவர் – வெளிச்சுவரான உடம்பை
- கோலம் செய்து – அலங்கரித்து
- புள் கவ்வ – பறவைகள் கவ்விக்கொள்ளும் படி
- கிடக்கின்றீரே – கிடக்கின்றீர்களே.