Veda Gyanam

We're open for new collaborations.
News to be updated weekly.

திருப்பாவை பாசுரம் 4

ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
பதம் பிரித்த பாடல்
1. ஆழி மழை கண்ணா ஒன்று நீ கை கரவேல்
(ஆழி என்பது இங்கு கடல் அல்லது வட்ட வடிவு உள்ளதாய் இருக்கும் இவ்வுலகம்)
மழையை பொழியும் கண்ணா – இங்கு ஆண்டாள் தன் கிருஷ்ணனை வர்ணிக்கிறாள் )
ஒன்று நீ கரவேல் என்பது – நீ என்னிடம் ஒன்றையும் மறைக்காதே என்று அர்த்தம் )
2. ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஆழியுள் – சக்கிரத்தில்  , புக்கு – புகுந்து , முகந்து – கொணர்ந்து, கொடார்தெரி – கொடார் என்பது இங்கு மின்னலை குறிக்கிறது. எப்படி மின்னல் வானத்தில் இருந்து விஷ்ணுவின் சக்கிரம் தெரிகிறதோ  அதை இங்கு ஆண்டாள் கூறுகிறாள்
3. ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
ஊழி என்றால் அல்லது முதலிலிருந்து இருப்பவன், முதல்வன் – முதலில் தோன்றியவன் – உருவம் கருத்த மேனியை உடையவன் . கிருஷ்ணன் இங்கு வர்ணிக்க படுகிறார்
4. பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
பாழி – பெரிய , தோளுடைய – தோள்களை கொண்டவன் – பத்மநபான் கையில்
5. ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
அந்த சக்கிரத்தை போல் மின்னி வலம்புரி சங்கு போல் முழங்கி
6. தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
தாழாத – உடனடியாக , சாரங்கன் – விஷ்ணுவின் நாண் , உதைத்த சர மழை போல் – விஷ்ணுவின் அம்பை குறிக்கிறது
7. வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
வாழ்கின்ற இவ்வுலகில் மழை பெய்து நாங்களும்
8. மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
மார்கழி மாதத்தில் நீராடி மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனை கூப்பிடுவோம்
This is a beautiful description by Andal where she describes the lord in her own way. She describes her lord as below.
a. the lord that bestows rain on the earth
b. the lord that has a circular disc in his hand and is expansive as the ocean
c. the lord known as padmanabha who has broad shoulders and who holds a valampuri conch and blows his conch with a loud sound.
d. the lord who has bow and arrow and the arrows keep coming at rapid speed with out respite.
e. the lord who is primordial and also is representative of the very first which represents supreme consciousness here.
To such a lord, let’s take bath in the month of Margzahi and pray to him. Andal extols her friends to get up early and pray to the lord.

Powered by WordPress.com.

%d bloggers like this: