Thiruvarutpa

பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்
பராபர மநாமய நிராதர மகோசரம் பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோ தயமக்ஷயம்
There Ramalinga Adigal or Vallalar gives us a view of what is Brahman or consciouness. Even though he was a bhakti person, his poems are littered with Advaitam all over. One has to view that Bhakti will lead to Gyanam eventually. Vallalar was a person who posessed both and was able to see this vision very clearly.

பரம வ்யோமம் – Just like the expanse of the sky. The sky is limitlessly vast.
பரம ஜ்யோதிமயம் – Absolutely illustrious. No other light is required to shine this light.
விபுலம் – Available everywhere. Abundant and not restricted to one location. Omnipresent.
பரம் பரமானந்தம் – Absolute happiness.
அசலம் – Doesn’t move.
பரம லோகஆதிக்கம் – Overlordship of all
நித்தியம் – That which is available always.
பிராச்சியம் – Ancient .
பரமபதம் – belongs to higher order of reality.
பரம சூக்ஷ்மம் – very subtle and hidden and not available for experience.
பராபர மனாமயம் – is residing in the deepest part of the manah and is the light for the mind.
பரம தந்திரம் – Very deceptive and not easy to be known. Just like a magician who wields the magic wand and mesmerizes, so is this.
விசித்திரம் – Different from other objects.
பராமுத நீராகாரம் – No particular form.
விகாசனம் – That which expands. The word Brahman is from the word ‘Brih’ which means expand.
விகோட்டணம் – Guna rahitham
பரசுகா தோயம் – That which gives eternal happiness.
அக்ஷயம் – That which does not get destroyed.

Thayumanavar – Mind Control

Thayumanavar’s advice to the serious student of spiritual philosophy is to discipline the mind, control desires and meditate peacefully. Again this message is more relevant for people living in affluent conditions, when one is apt to over indulge in insatiable desires and ultimately get overawed in desperation. He was the first to admit that “it is easy to control an elephant, catch hold of the tiger’s tail, grab the snake and dance, dictate the angels, transmigrate into another body, walk on water or sit on the sea; but it is more difficult to control the mind and remain quiet”.

(யானையைஅடக்கலாம், புலிவாலைக் கட்டலாம், பாம்பையெடுத்தாட்டலாம், விண்ணவரை ஏவலாம், வே§ர் உடல் புகலாம், சலமேல் நடக்கலாம், கடல்மேல் இருக்கலாம். ஆனால் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது (சேரசோமயானந்தம் 8.)

He condemned excessive desires towards land, gold and woman (மண், பொன், பெண்) and pleaded to God that his only desire was to remain in perfect peace within. (சும்மா விருப்பதற்கே அல்லும் பகலுமெனக்காசை பராபரமே (பராபரக்கண்ணி 8).

A similar thought had been expressed by ThiruvaLLuvar earlier:

பற்றுக பற்றற்ன் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு
(குறள், 350)

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

A person should rise from material desires to developing a desire to know who the lord is. You develop a desire to leave the existing ones and follow the desire to know divine.

  874 -Divyaprabhandham

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதை பாலகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

 1. மனிசர் தாம் – மநுஷ்யர்கள்
 2. வேதம் நூல் – வேதசாஸ்திரத்திற்படியே
 3. நூறு பிராயம் புகுவரேலும் – நூறுபிராயம் வாழ்ந்திருப்பர்களேயானாலும்
 4. பாதியும் – அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
 5. உறங்கி போகும் – உறக்கத்தாலே கழியும்;
 6. நின்ற இப்பதினையாண்டு – மிகுந்த ஐம்பது வருஷம்
 7. பேதை – சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
 8. பாலகன் – ‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும் அது ஆகும் – நெஞ்சால் நினைக்கவும் தகாதயௌவநாவஸ்தையாயும்
 9. பிணி – வியாதிமயமாயும்
 10. பசி – ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
 11. மூப்பு – கிழத்தனமாயும்
 12. துன்பம் – மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
 13. ஆதலால் – இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
 14. பிறவி – ஜந்மத்தை
 15. வேண்டேன் – விரும்புகிறேனில்லை.

Divya prabhandam

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பச்சை மா மலை போல் மேனி – பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்

பவளம் வாய் – பவளம் போன்ற சிவந்த திருவாயையும்

செம் கமலம் கண் – செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுமுடைய

அச்சுதா – அச்சுதனே! அச்சுதன் என்றால் தூயமானவன்

அமரர்ஏறே – அமரன் என்றால் அழிவு இல்லாதவன்

ஆயர்தம் கொழுந்தே – ஆயர் குலத்தில் பிறந்த கொழுந்தே அல்லது இடையர் குலத்தில் பிறந்த இளம் குமாரனே

என்னும் – என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற

இச்சுவை – இந்த அநுபவ ருசியை

தவிர – விட்டுவிடும்படி

யான்போய் – யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று

இந்திர லோகம் ஆளும்- இந்திர லோகம் எனக்கு கிடைத்தாலும்

அச்சுவை – அந்த அநுபவருசியை(இந்திர லோகத்தில் கிடைக்கும்)

பெறினும் – அடைவதாயிருந்தாலும்

வேண்டேன் – (அதனை) விரும்பமாட்டேன்

Here  the poet Thondaradi Podi Alwar describes the lord as Achuta and Amarar , an attribute of brahman that is pure and always immortal. He describes the colour of the lord as Green which symbolizes fertility and growth (a peson’s mind, body has to be fertile and should be able to mature to know who is the lord). The poet says that if you give me indra loka or take me there, i am not interested as I would lose the benefit of singing your praise and knowing you. What’s the point of going to indra loka when I can be with you just by uttering your name and praise. The words expressed by the poet seem very touching and one can see the inseparable bhakti between him and the lord. He says Paramatma here and his lotus shaped lips denote the water lily which is beautiful to look. The water in a lotus leaf drops on to it but doesn’t stay and is untainted by the water nor gets wet. The poet is far advanced in bhakti and probably one of the best rendered composition I have heard.