இறைவன் யார் என்பதை தாயுமானவர் மிக அழகாக இங்கு கூறி உள்ளார் 

ஐவகை எனும்பூதம் ஆதியை வகுத்து 

அதனுள் அசரசர பேதம் ஆன 

யாவையும் வகுத்து, நல் அறிவையும் வகுத்து 

மறை ஆதி நூலையும் வகுத்து 

சைவம் முதல் ஆம் அளவில் சமயமும் வகுத்து 

மேல்சமயம் கடந்த மோன 

சமரசமும் வகுத்தவன் 

ஐவகை – ஐந்து விதம் (

பூதம்  – உலகத்தில் காணும் ஐந்து விதமான பொருள் (ஆகாயம், நீர் , நெருப்பு , பூமி, காற்று)

ஆதியை வகுத்து – இவ்வாறு ஐந்து பொருள்களையும் உருவாக்கி 

அதனுள் – அதில் 

அசர – மாறாதவை 

சர – மாருகின்றவை 

பேதம் – வித்தியாசம் 

ஆன யாவையும் வகுத்து – இவைகளை உருவாக்கி 

நல் அறிவையும் வகுத்து – நமக்கு நல்ல அறிவையும் கொடுத்து 

மறை ஆதி நூலையும் வகுத்து – சாஸ்திரம் என்கிற நூலையும் நமக்கு கொடுத்து 

சைவம் முதல் ஆம் அளவில் – அந்த சிவ குரு முதலில் தோன்றிய 

சமயமும் வகுத்து – நேரமும் உருவாக்கி 

மேல் சமயமும் கடந்த – நேரம் அல்லது சமயத்திற்கு எட்டாத 

மோன சமரசமும் வகுத்தவன் – மௌன ரூபமாகவே இருக்கிற அந்த 

கடவுளே இறைவன் என்று தாயுமானவர் இங்கு கூறியுள்ளார்